Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“வானமே எல்லை…” ஆஸ்கர் கமிட்டி அழைப்பு… சூர்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

“வானமே எல்லை…” ஆஸ்கர் கமிட்டி அழைப்பு… சூர்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
, புதன், 29 ஜூன் 2022 (14:27 IST)
நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் விருதுகள் கமிட்டியில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வழங்கப்படும் அகாடமி விருது எனப்படும் ஆஸ்கர் விருது உலக புகழ்பெற்ற ஒன்று. பலகாலமாக இந்த விருதை பெற இந்திய சினிமா முயற்சி செய்து வருகிறது. கடந்த ஆண்டு சூர்யாவின் சூரரை போற்று ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்டது. பரிந்துரைக்கு முன்னாள் இறுதி செய்யப்பட்ட 366 படங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய படமாக சூரரை போற்று இருந்தது, பின்னர் வெளியேறியது.  அதே போல சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படமும் ஆஸ்கர் கமிட்டியின் யுடியூப் பக்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவுக்கு  2022 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது. ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 397 பேரில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோலின் பெயரும் இடம்பெற்றுள்ளது. புகழ்பெற்ற மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அகாடமியில் சேர நடிகர் சூர்யாவுக்கும் பாலிவுட் நடிகை கஜோலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கௌரவத்தைப் பெற்றுள்ள சூர்யாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர மு க ஸ்டாலின் “தனது நேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறைக் கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய என்ற உலகப்பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள். வானமே எல்லை!” எனப் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருண் விஜய் நடிக்கும் ‘யானை’…. வெளியானது புதிய கிளிம்ப்ஸ்!