Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெருங்க நினைத்த ரசிகர்கள் - நெருப்பு துப்பாக்கியால் சுட்ட மிருணாளினி வீடியோ!

Advertiesment
நெருங்க நினைத்த ரசிகர்கள் - நெருப்பு துப்பாக்கியால் சுட்ட மிருணாளினி வீடியோ!
, புதன், 29 மார்ச் 2023 (14:10 IST)
டிக்டாக் ஆப் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான பின் நடிகையானவர் நடிகை மிருணாளினி. இவர் முக்கியமாக தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்த மிருணாளினி தனது ஓய்வு நேரத்தில், அவர் டிக்டோக் மற்றும் டப்ஸ்மாஷ் வீடியோக்களைப் பதிவேற்றினார். 
 
அதன் பின்னர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா அந்த வீடியோக்களில் ஒன்றைப் பார்த்து, சூப்பர் டீலக்ஸ் படத்திற்கான ஆடிஷனுக்கு அழைத்தபோது அவரது திரை வாழ்க்கை தொடங்கியது. அதன் பின்னர் சுசீந்திரனின் சாம்பியனில் முன்னணி நடிகையாக நடித்தார். 
 
தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.கடலக்கொண்டா கணேஷ் என்ற திரைப்படத்தில் நடிகர் அதர்வா வின் நாயகியாக அறிமுகம் ஆனார். டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள படத்தின் மறுஆய்வில், விமர்சகர் "மிருனாலினி தன்னிடம் இருக்கும் திரை நேரத்தில் அற்புதமான நடிப்பை வழங்குகிறார்" என்று எழுதினார். 
 
மிருனாலினி கதாநாயகியாக பொன்ராம் எம்.ஜி.ஆர் மகன் ஜாங்கோ, எனிமி கோப்ரா, போகரு ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் போது ரசிகர்களை சந்தித்த நிகழ்ச்சி ஒன்றில் நெருப்பு துப்பாக்கியால் அங்கிருந்த ரசிகர்கள் கூட்டத்தை அலார்ட் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதவி இயக்குனர்களுக்கு நிலம் வாங்கிக் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்?