Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலு நலமாக உள்ளார்… அமைச்சர் தகவல்!

Webdunia
சனி, 25 டிசம்பர் 2021 (14:14 IST)
சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கும் வடிவேலு நலமாக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய காமெடி நடிகராக இருப்பவர் வடிவேலு. கடந்த சில காலமாக பல்வேறு காரணங்களால் படம் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது சுராஜ் இயக்கத்தில் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான பணிகள் தொடங்கிய நிலையில் நடிகர் வடிவேலு படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றிருந்தார். அங்கிருந்து சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மூன்று நாட்களாக சிகிச்சையில் இருக்கும் வடிவேலுவின் உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேர்மறையான தகவலை வெளியிட்டுள்ளார். வடிவேலு நலமாக இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளருக்கு செலவு சுமை கொடுக்காமல் சம்பளம் வாங்கும் சல்மான் கான்.. தமிழ் நடிகர்களும் பின்பற்றுவார்களா?

பீரியட் படமாக இருந்தும் ‘பராசக்தி’ படத்தை வித்தியாசமாக படமாக்கும் படக்குழு!

சம்பளத்தை சொல்லி சன் பிக்சர்ஸையே ஓடவிட்ட அட்லி… அல்லு அர்ஜுன் படத்தில் நடந்த மாற்றம்!

சிம்பு 49 படம் தொடங்குவதில் தாமதம்… இதுதான் காரணமா?

வடசென்னை 2’ படத்தில் தனுஷ், வெற்றி மாறன் தான்.. தயாரிப்பாளர் மட்டும் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments