Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சல் படத்தின் மற்றுமொரு புதிய தகவலை வெளியிட்ட பாடலாசிரியர்

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (12:15 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்து தீபாவளிக்கு வெளிவரும் திரைப்படம்  ’மெர்சல்’. இந்தப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், யோகிபாபு எனப் பல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான்  இசையமைக்கிறார்.

 
விஜய், அட்லியின் கூட்டணியில் உருவான ‘மெர்சல்’ படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாக்கியுள்ளது. ஏற்கனவே பாடல்கள், டீசர் என அனைத்தும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்கள் ஏற்கனவே சூப்பர்ஹிட் ஆகியுள்ளது.


 
இந்நிலையில் இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதிய கவிஞர் விவேக் தற்போது ட்விட்டரில் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.  "இன்னும் ஒன்று மீதமுள்ளது" என அவர் ட்விட்டியதை பார்த்தால் மெர்சல் படத்தின் இன்னொரு பாடல் விரைவில் வரும் என்பது தெரிகிறது. மேலும் அது பற்றிய முழு தகவல் இன்று வெளிவரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி!

சத்தத்தை வைத்து பயமுறுத்தும் ‘சப்தம் 2’ டிரைலர்…எப்படி இருக்கு?

கெட்டவங்க மட்டும் இல்ல… யார் வேணும்னாலும் கொல பண்ணலாம்… எப்படி இருக்கிறது சுழல் 2 டிரைலர்?

ஜி வி பிரகாஷ்& சைந்தவி விவாகரத்தில் என்னை பெண்கள் டார்கெட் செய்கிறார்கள்.. திவ்யபாரதி வருத்தம்!

சேரனின் ‘ஆட்டோகிராப்’ ரீரிலீஸ்.. அசத்தலான ஏஐ வீடியோ வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments