Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருமகனுக்காக 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோ!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (16:06 IST)
மாஸ்டர் படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு சினிமா தயாரிப்பில் இறங்கினார் விஜய்யின் மாமாவான சேவியர் பிரிட்டோ. இவர் ஏற்கனவே விஜய்யின் ஆரம்பகால படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார். அதற்கான நன்றிக்கடனாகதான் விஜய் அவருக்கு மாஸ்டர் படத்தின் வாய்ப்பை அளித்தார்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் வெற்றியை அடுத்து வரிசையாக படங்களை தயாரிக்கும் ஆர்வத்தில் ஒருந்த சேவியர் பிரிட்டோ, அடுத்த படத்தில் தனது மகளின் கணவரும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷை கதாநாயகனாக வைத்து தயாரிக்க திட்டமிட்டார். இந்த படத்தை பிரபல இயக்குனரான விஷ்ணுவர்தன் இயக்க ஒப்பந்தம ஆனார். அவருக்கு சம்பளமாக மிகப்பெரிய தொகை அட்வான்ஸாக கொடுக்கப்பட்டது.

ஆனால் பாலிவுட்டில் சல்மான் கான் படத்தை இயக்கும் பேச்சுவார்த்தையில் இருந்த விஷ்ணுவர்தன், இந்த படத்தைக் கண்டுகொள்ளவே இல்லையாம். இந்நிலையில் இப்போது அவரை அழைத்து பேசியுள்ள சேவியர் பிரிட்டோ, விரைவில் படத்தைத் தொடங்க சொல்லியுள்ளார். அதனால் விரைவில் இந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படம் மிகப் பிரம்மாண்டமாக 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments