விஜய்யின் மாஸ்டர் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று காலை 4 மணிக்காட்சியோடு ரிலீஸாகியுள்ளாது. சமூகவலைதளமெங்கும் மாஸ்டர் கொண்டாட்டமாக இருக்கிறது. சிறப்புக் காட்சி முடிந்து படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் முதல் பாதி செம்மயாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக செல்வதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சிலர் லோகேஷிடம் இருந்து இதுபோல மெதுவானக் காட்சிகளை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் விஜய் ரசிகர்களுக்கு பிடித்த படமாக மாஸ்டர் இருக்கும் என சொல்லப்படுகிறது.