Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறளரசனுக்கு திருமணம் : சிம்பு இருக்க தம்பிக்குத் திருமணம் ஏன் ?

Webdunia
சனி, 6 ஏப்ரல் 2019 (15:04 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இல்லத்திற்குச் சென்ற டி.ராஜேந்தர் தனது மகனும் இசையமைப்பாளருமான குறளரசனின் திருமணத்துக்கு அழைப்பிதழை வழங்கினார்.
தமிழ் சினிமாவில் 80 களில் கலக்கிய டி.ஆர் தனது தனித்துவமான நடிப்பால் தனி முத்திரை பதித்தார்.  அவரது மகன்கள் சிம்பு என்கிற சிலம்பரசன், இளைய மகன் குறளரசன்.
 
சிம்பு நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கிறார். குறளரசனும் இது நம்ம ஆளு என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.
 
சமீபத்தில் குறளரசன் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் குறளரசனின் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எனவே திரை உலகில் உள்ள முக்கியஸ்தர்களுக்கு ராஜேந்தர் அழைப்பிதழை வழங்கினார்.
 
சிம்புவுக்குத் தான் முதலில் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவரது தம்பிக்கு திருமணம் நடக்க இருக்கிறது.
 
ஒருவேளை சிம்பு யாரையாவது காதலித்து வருகிறாரா? இல்லை பொருத்திருந்து அப்பா, அம்மா சொல்லுகிற பெண்ணைத் திருமணம் செய்வாரா என எல்லோருக்கும் கேள்வி எழுப்ப..இதற்குச் சிம்பு சஸ்பென்ஸ் வைத்து இருக்கிறார் என்று தோன்றுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'விடுதலை 2’ படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட்: ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

வேட்டையன் ரிலீஸுக்கு முன்பே அதற்குக் கள்ளிப்பால் கொடுத்துவிட்டார்கள்… இயக்குனர் வேதனை!

கோட் படத்தை விட அதிக ரசிகர்கள் அமரன் படத்தைப் பார்த்துள்ளார்களா?.. வெளியான தகவல்!

முருகதாஸ் & சல்மான் கான் படத்தில் சந்தோஷ் நாராயணன்..!

ஓடிடில வர்றதுக்கு முன்னாடியே லால் சலாம் HD ப்ரிண்ட் இணையத்தில் லீக்!

அடுத்த கட்டுரையில்