நடிகை ரைசா தாம் திருமணம் செய்ய விரும்பும் நடிகரின் பெயரை தற்போது தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் புகழ் ரைசா 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அவதாரமெடுத்து வெற்றிகண்டு தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். அதனை தொடர்ந்து தற்போது 'அலைஸ்' , 'காதலிக்க யாருமில்லை' என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவரிடம் சினிமா துறையில் நீங்கள் திருமணம் செய்ய நினைக்கும் நபர் யார் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் விஜய் மற்றும் விஜய் தேவரக்கொண்டா ஆகியோரின் பெயரை தெரிவித்தார்.