Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீரியலில் செம்ம டிமாண்ட்… ராதிகா நடிக்க அழைத்தும் மறுத்த நடிகர் மாரிமுத்து!

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (08:14 IST)
தமிழில் இருக்கும் திறமையான குணச்சித்திர நடிகர்களில் மாரிமுத்துவும் ஒருவர். பரியேறும் பெருமாள் படத்தில் நடிகை கயல் ஆனந்தியின் தந்தையாக அவர் நடித்திருந்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இது தவிர, கொம்பன், பரியேறும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இப்போது சீரியலிலும் கால் பதித்துள்ள மாரிமுத்து ‘எதிர் நீச்சல்’ சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் அவரின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ் சீரியல் நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உருவாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சீரியலில் வெளுத்து வாங்கும அவரை நடிகை ராதிகா தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்க அழைத்தும் தேதிகள் இல்லாததால் அவரால் நடிக்க முடியவில்லையாம். இதை மாரிமுத்து ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இப்போது அந்த கதாபாத்திரத்தில்தான் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புரமோஷனில் புதிய டிரெண்ட் உருவாக்கும் கமல்ஹாசன்.. வேறு கண்டத்தில் தக்லைப் புரமோஷன்..!

’விடாமுயற்சி’ தோல்வியால் அஜித்துக்கு பாதிப்பே இல்லை.. ஆனால் படுகுழியில் விழுந்த மகிழ் திருமேனி..!

சென்னை ஆபீஸை இழுத்து மூடிய சிறுத்தை சிவா.. கோலிவுட்டை விட்டே செல்கிறாரா?

ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments