Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் கார்த்திக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி?

karthy
, வெள்ளி, 14 ஜூலை 2023 (20:49 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கார்த்தி. இவரது  அடுத்த படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக  நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் படத்தின் மூலம்  நடிகராக அறிமுகமானவர் கார்த்தி. அதன்பின்னர், பையா,  அலெக்ஸ்பாண்டியன், சிறுத்தை, விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில்  நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில்  வெளியான சர்தார் படம்  ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூல் குவித்தது.

இந்த  நிலையில், சர்தார் படத்தின் 2 வது பாகம் வெளியாகும் என தகவல் வெளியானது.

இப்படத்தின் வில்லனாக நடிக்க படக்குழு, விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகிறது.   இவர்கள் இருவரும் ஏற்கனவே நான் மகான் அல்ல படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

தற்போது கார்த்தி  ஜப்பான் என்ற படடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென மாலத்தீவுக்கு பறந்த ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படங்கள்..!