Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதி தயாரிப்பாளருக்கு எதிராக ஆள் சேர்க்கும் மாரிதாஸ்!

Webdunia
சனி, 10 ஜூலை 2021 (10:12 IST)
கைதி படத்தின் தன்னுடையது என கேரளாவை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

’கைதி’ படத்தின் சர்ச்சை குறித்து ஏற்கனவே அதன் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு டுவிட் ஒன்றின் மூலம் விளக்கம் அளித்து வந்த நிலையில் தற்போது இதுகுறித்து தனது டிரீம் வாரியர் நிறுவனத்தின் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எங்களின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் கதை திரைக்கதை இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளிவந்த ’கைதி’ திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இது சம்பந்தமாக நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்டு வருகின்றனர். எங்களுக்கு இந்த வழக்கு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரியாத காரணத்தினால் அதை பற்றி விவரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது 

இந்நிலையில் மாரிதாஸ் இப்போது தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவுக்கு எதிராக ஒரு சமூகவலைதளப் பதிவை பகிர்ந்துள்ளார். அதில் ‘தற்போது கைதி திரைப்படம் முன்பு கொம்பன் படக் கதை திருட்டு சார்ந்து குற்றம்சாட்டப்பட்ட தயாரிப்பாளர் (நடிகர் சிவக்குமார் உறவினர்) SR பிரபு அவர்களால் கதை கேட்டு ஏமாற்றப்பட்டவர்கள் யாரும் இருப்பீர்கள் என்றால் எங்களைத் தொடர்பு கொள்ளவும். தயக்கம் வேண்டாம் உண்மை என்றால் உரிய நீதி கிடைக்கும். விவரம் அனுப்ப வேண்டிய Email முகவரி : imsi.maridhas@gmail.com கதை திருட்டிற்கு உடந்தையாக இருந்த அனைத்து நடிகர்களும் சிறைக்கு அனுப்ப அல்லது குறைந்தபட்ச தண்டனையாவது வாங்கி கொடுக்க தேவையான முயற்சி எடுக்கப்படும். அரசியல் கட்சிகளின் ஆசியோடு சில குடும்ப உறவினர்கள் ஆதிக்கத்தோடு அப்பாவி இளைஞர்களின் பல ஆண்டு கனவுகளைத் திருடுவதை அனுமதிக்க முடியாது , கூடாது.’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments