பைசன் படத்தின் இசை மற்றும் ஆடியோ ரிலீஸ் எப்போது?

vinoth
செவ்வாய், 7 அக்டோபர் 2025 (13:21 IST)
ஆதித்யா வர்மா மற்றும் மகான் ஆகிய படங்களைத் தொடர்ந்து துருவ் விக்ரம் தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக மாரி செல்வராஜோடு கூட்டணி அமைத்துள்ளார் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா.

பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது. படத்தில் இருந்து வெளியானப் பாடல்கள் இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

இந்த படத்துக்கு இன்னும் படக்குழு ப்ரமோஷனைத் தொடங்கவில்லை. இந்நிலையில் அக்டோபர் 12 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான்கு நாட்களில் 335 கோடி ரூபாய் வசூல்… பிளாக்பஸ்டர் காந்தாரா !

பாகுபலி மூன்றாம் பாகமா?... விளக்கம் கொடுத்த தயாரிப்பாளர்!

இந்திக்கு செல்லும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி… இசையமைக்கும் ஏ ஆர் ரஹ்மான்!

பைசன் படத்தின் இசை மற்றும் ஆடியோ ரிலீஸ் எப்போது?

ரஜினி - கமல் படத்தை இயக்கும் வாய்ப்பை மறுத்தாரா ப்ரதீப் ரங்கநாதன்?

அடுத்த கட்டுரையில்
Show comments