தூரத்தில் இருந்தே உங்களைக் கட்டித் தழுவுகிறேன் மாரி செல்வராஜ்… பைசன் படத்தைப் பார்த்து பாராட்டிய வைகோ..!

vinoth
சனி, 25 அக்டோபர் 2025 (08:18 IST)
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக ‘பைசன்’நேற்று ரிலீஸானது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.


இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. ஐந்து நாட்களில் உலகளவில் சுமார் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிவரும் பைசன் படத்துக்கு வெவ்வேறு தளங்களில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான வைகோ இந்த படத்தைப் பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ள முகநூல் பதிவில் “நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த ஒரு சினிமா இதை எடுத்த இயக்குனர் யார் என்று தேடவைத்தது மாரி செல்வராஜ். நீங்கள் தூரத்தில் இருக்கிறீர்கள் நான் இங்கிருந்தே பெரும் மன நிறைவோடு பைசனுக்காக உங்களை கட்டி தழுவுகிறேன் மாரி செல்வராஜ்'
- வைகோ

பைசன் பார்த்துவிட்டு தொலைபேசியில் அழைத்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக பைசனை பாராட்டி உச்சிமுகர்ந்த பெரும் மரியாதைக்குரிய ஐயா வைகோ அவர்களுக்கு எங்கள் நன்றியையும் அன்பையும் தெரிவித்து கொள்கிறோம்.” என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குநர் வி. சேகர் காலமானார்: சமூகம் பேசிய படைப்பாளியின் இறுதிப் பயணம்!

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments