Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாள சூப்பர் ஸ்டார்கள் நடித்துள்ள ‘மனோரதங்கள்’ ஆந்தாலஜி ஓடிடியில் ரிலீஸ்!

vinoth
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (08:36 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே மலையாள சினிமா மிகவும் ஆரோக்யமான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. அங்கே நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்று வருகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான பிரேமலு, ப்ரமயுகம், மஞ்சும்மள் பாய்ஸ், ஆடு ஜீவிதம், வர்ஷங்களுக்கு ஷேஷம் மற்றும் ஆவேஷம் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளன. இந்த படங்கள் கேரளா தாண்டியும் பிற மொழி ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் இப்போது மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மோகன் லால், மம்மூட்டி, பஹத் பாசில், பிஜு மேனன் உள்ளிட்ட பலர் ஒன்றிணைந்து மனோரதங்கள் என்ற ஆந்தாலஜி படம் ஒன்றில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இந்த ஆந்தாலஜியின் சிறப்பு என்னவென்றால் மலையாள சினிமாவின் முதுபெரும் எழுத்தாளரான எம் டி வாசுதேவன் நாயரின் 8 கதைகளை எடுத்து அதை 8 குறும்படங்களாக எடுத்து அதை ஒரு ஆந்தாலஜியாக இணைத்துள்ளார்.

இந்த ஆந்தாலஜி நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜி 5 தளத்தில் நேரடி ரிலீசாக வெளியாகியுள்ளது. வெளியானது முதல் பாசிட்டிவ்வன விமர்சனங்களை இந்த தொடர் பெறத் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments