ரோமாஞ்சம் என்ற படத்தை இயக்கிய ஜிட்டு மாதவன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸான பஹத் பாசில் நடித்த ஆவேஷம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் கலக்கிடது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக 150 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.
இந்த படம் மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சில தினங்களாக தகவல்கள் வெளியாகின. அதில் பஹத் பாசில் நடித்த கதாபாத்திரத்தில் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க உள்ளதாக சொல்லப்பட்டது.
இது பாலகிருஷ்ணா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இப்போது பாலகிருஷ்ணா தான் ஆவேஷம் படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.