Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணையும் மம்மூட்டி மோகன்லால் கூட்டணி… நெட்பிளிக்ஸ் உருவாக்கும் ஆந்தாலஜி!

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (15:02 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் புதிய ஆந்தாலஜிக்காக மீண்டும் இணைய உள்ளனர்.

மலையாள சினிமாவின் இருபெரும் சூப்பர் ஸ்டார்களாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகின்றனர் மம்மூட்டியும் மோகன்லாலும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் இணைந்து படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக மலையாள சினிமா சங்கத்தின் நிதிக்காக ஒட்டுமொத்த மலையாள சினிமா கலைஞர்களும் சேர்ந்து உருவாக்கிய ட்வண்ட்டி ட்வண்ட்டி என்ற படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்போது நெட்பிளிக்ஸ் பிரம்மாண்டமாக உருவாக்கும் ஆந்தாலஜியில் இருவரும் நடிக்க உள்ளனர். இந்த ஆந்தாலஜியின் கதைகள் அனைத்தும் எழுத்தாளர் எம் டி வாசுதேவன் படைப்புகளில் இருந்து எடுக்கப்பட உள்ளன. மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களான பிரியதர்ஷன், லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஆகியோர் இந்த ஆந்தாலஜியை இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments