Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த படம் நடித்தால் அது அவர் இயக்கத்தில்தான்… உதயநிதி ஸ்டாலின் பதில்!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (08:39 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆக வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் “இதுதான் என் கடைசி படம். கமல்ஹாசன் சார் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. ஆனால் அமைச்சர் பதவி கொடுத்ததால் அதற்கு மேல் படங்களில் நடிக்க முடியாத சூழல். எனக்கும் மாரி செல்வராஜுக்கும் நிறைய புரிதல் உருவாகியுள்ளது. அவர் அடுத்து நான் படத்தில் நடித்தால் அவர் இயக்கத்தில்தான் நடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். நானும் அவரிடம் அந்த வாக்குறுதியைக் கொடுத்துள்ளேன். ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் படங்களில் நடிக்க போவதில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படம் வெளியாகும்போது மட்டும் தான் இந்து கடவுள்கள் ஞாபகம் வருமா? சூர்யாவுக்கு குவியும் கண்டனங்கள்..!

திருமண நிகழ்ச்சியை கூட காசுக்காக விற்கும் பிரபலங்கள்.. லேட்டஸ்ட் ஜோடி அமீர் - பாவனி..!

இப்படி ஒரு விஷயம் இருப்பதே எனக்குத் தெரியாது.. வெற்றிமாறன் அண்ணன்தான் சொன்னார்- மண்டாடி படம் குறித்து சூரி!

மீண்டும் இணையும் மாரி செல்வராஜ்- ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி.. எந்த படத்தில் தெரியுமா?

பெண் சாமியார் கேரக்டரில் நடித்த தமன்னாவுக்கு படுதோல்வி.. பட்ஜெட் 25 கோடி, வசூல் 2 கோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments