Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''மாமன்னன் படத்தில் முக்கிய அரசியலை அவர் பேசியுள்ளார்' - பா.ரஞ்சித்

''மாமன்னன் படத்தில் முக்கிய அரசியலை அவர் பேசியுள்ளார்' -  பா.ரஞ்சித்
, வியாழன், 1 ஜூன் 2023 (21:33 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில்,  உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தற்போது  நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆடியோ ரிலீஸ் விழாவில் நடிகர்  கமல்ஹாசன், பா.ரஞ்சித்  உள்ளிட்ட  பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில் பேசிய பா.ரஞ்சித் ஒரு முக்கியமான தகவலை தெரிவித்துள்ளார். அதில்,  ''மாரி செல்வராஜூக்கு இப்படி ஒரு மேடை கிடைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
இப்படத்தின் கதையைக் கேட்டதும் ரொம்ப சீரியஸாக இருந்தது.  ஒஞ்சம் மாற்றி எழுதக் கூறினேன் அவரிடம். ஆனால், இப்படத்திற்கு சீரியஸ் டோன் தான் சரியாக இருக்கும் என்றார். இப்படத்திலும் ஒரு முக்கிய அரசியலை அவர் பேசியுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய அந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''எனக்கு கேப்பே இல்லை''... மாமன்னன் பட ஆடியோ விழாவில் வடிவேலு பேச்சு