Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது படத்திலேயே ரூ.5 கோடி சம்பளம்: நயன்தாராவை முந்திய மாளவிகா மோகனன்

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (07:28 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து இருந்தாலும் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்த முதல் தமிழ் படம் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ என்றே கூறலாம். இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் மாளவியா மோகனனுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிரபல நடிகர்கள் நடிக்க இருக்கும் இரண்டு படங்களில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றில் நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த படத்திற்காக அவருக்கு ரூபாய் 5 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் தொடர்ச்சியாக 100 நாட்கள் இந்த படத்திற்காக அவர் கால்சீட் கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி நடித்த ’மாம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய ’ரவி உத்யவார் என்பவர் இயக்கும் இந்த படத்தில் சித்தாந்த் சதுர்வேதி என்பவர் மாளவிகா மோகன்னனுக்கு நாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தில் மாளவிகா மோகனனுக்கு அதிகமான அளவில் ஆக்ஷன் காட்சிகள் இருப்பதால் சண்டை பயிற்சிகளில் அவர் தற்போது பயிற்சி பெற்று வருவதாகவும் குறிப்பாக மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன 
 
தமிழ்த்திரையுலகில் நயன்தாரா மட்டுமே மூன்று கோடிக்கும் மேல் அதிகமாக சம்பளம் வாங்கும் நாயகியாக இருந்து வரும் வரையில் மாஸ்டர் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே கதாநாயகியாக நடித்த மாளவிகா மோகனன், இரண்டாவது படத்திலேயே 5 கோடி சம்பளம் பெற்று நயன்தாராவை முந்தி இருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் என் மேல் ‘அதற்காக’ அதிருப்தியில் இருக்கலாம்.. வெங்கட்பிரபு பகிர்ந்த தகவல்!

வெற்றிமாறன் எனும் மாஸ்டர் பில்ம்மேக்கர்… ‘விடுதலை 2’ படத்தைப் பாராட்டிய தனுஷ்!

சூர்யா 4 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு எப்போது?... அறிவித்த கார்த்திக் சுப்பராஜ்!

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments