மோகன் லால் நடிக்கும் மலைக்கோட்டை வாலிபன் படத்தின் கதை இதுவா? வதந்திகளை மறுத்த தயாரிப்பாளர்!

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (16:11 IST)
மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி ஆகியோரை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்க விரும்பி, அவர்களிடம் மோகன்லால் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்ல்லப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் இந்தியன் 2 பட வேலைகளைக் காரணம் காட்டி அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார் என்றும், ரிஷப் ஷெட்டியும், தனது அடுத்த பட வேலைகளைக் காரணம் காட்டி மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் பிரபலமாக இருந்த மல்யுத்த வீரரான காமா என்கிற குலாம் முகமது பக்ஷ் என்பவரின் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை படத்தின் தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது. விரைவில் படம் பற்றி கூடுதலான தகவலை அறிவிப்போம் எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

பணமோசடி வழக்கு… இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் ‘பிக்பாஸ்’ புகழ் தினேஷ் கைது?!

மீண்டும் இணையும் ராஜமௌலி & ஜூனியர் என் டி ஆர்… பயோபிக் படமா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின்!

அடுத்த கட்டுரையில்
Show comments