Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகேஸ்வரன் கேசவன் இயக்கத்தில் புகழ் நாயகனாக நடிக்கும் 'FOUR சிக்னல்'!

J.Durai
திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (18:01 IST)
ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் R.S.மணிகண்டன் மற்றும் 
மகேஸ்வரன்கேசவன் இணைந்து தயாரிக்க மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் 'விஜய் டிவி' புகழ் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகும் 'Four சிக்னல்' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. 
 
அறிமுக இயக்குநரான  மகேஸ்வரன்கேசவன்,காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான திரைப்படமாக 'Four சிக்னல்' படத்தை உருவாக்கி உள்ளார். நகரங்களில் வசிக்கும் வெகு ஜனங்கள் வெகுவாக பயன்படுத்தும் எளிய போக்குவரத்தான ஷேர் ஆட்டோவை சுற்றி இந்த கதை சுழல்கிறது. 
 
சென்னையின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தினமும் ஷேர் ஆட்டோவில் செல்லும் பயணிகளுக்கும் அதன் ஓட்டுநருக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ள 'Four சிக்னல்' திரைப்படத்தை வரும் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. 
 
அருவி திருநாவுக்கரசு, கல்லூரி வினோத், லொள்ளு சபா சேஷு, ஷர்மிளா, விஜய் ஆதிராஜ், யூடியூபர் காத்து கருப்பு கலை உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க, A.J அலி மிர்சாக் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
 
மனிதர்களின் அந்தரங்க உணர்வுகளையும் யதார்த்தங்களையும்  உள்ளடக்கிய ரொமான்ஸ் டிராமாவாக  உருவாகியுள்ள 'Four சிக்னல்' திரைப்படத்திற்கு பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்ய, பிரியன் எடிட்டிங் செய்துள்ளார்.
 
படம் குறித்து பேசிய இயக்குனர்......
 
எளிய மக்களின் வாழ்க்கையில் நடக்கும் தினசரி நிகழ்வுகளின் சுவாரஸ்ய தொகுப்பாக 'Four சிக்னல்' இருக்கும். தரமான திரைப்படங்களை எப்போதும் ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள் இந்த திரைப்படத்தையும் ஆதரிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன் என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த படம் பற்றிய தகவல் இன்று வெளியாகும்.. தனுஷ் கொடுத்த அப்டேட்!

படங்களை ரீமேக் செய்வது அலுப்பான விஷயம்… இயக்குனர் சுந்தர் சி கருத்து!

பிரசாந்த் நீல் பெரிய இயக்குனர் என்பதால் அவர் படத்தில் நடிக்கவில்லை… ஜூனியர் என் டி ஆர் பதில்!

மலையாளம், தெலுங்கை அடுத்து கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை: திடுக் புகார்..!

தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் - காலத்தின் கட்டாயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments