Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகத்-ஐஸ்வர்யா படத்தின் புதிய அப்டேட்

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (11:25 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே நெருக்கமாக இருந்த மகத்தும் ஐஸ்வர்யாவும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபுராம் இயக்கவுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இன்று நடைபெற்ற பூஜையில் மகத், ஐஸ்வர்யா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

வடசென்னை இளைஞராக மகத்தும், அவரை காதலிக்கும் பணக்கார பெண் கேரக்டரில் ஐஸ்வர்யாவும் நடிக்கவுள்ளனர். இந்த படம் ரொமான்ஸ் மற்றும் காமெடியுடன் கூடியது மட்டுமின்றி கிளைமாக்ஸில் இன்றைய இளைஞர்களுக்கு தேவையான ஒரு நல்ல மெசேஜ் சொல்லப்படும் வகையில் இருக்கும் என இயக்குனர் பிரபுராம் தெரிவித்துள்ளார். இயக்குனர் பிரபுராம், பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் என்பதும் இன்றைய முதல் ஷாட்டை வெங்கட்பிரபு கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments