Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார் பட விவகாரத்தால் ஏற்பட்ட குழப்பம்: முடிவை மாற்றிக்கொண்ட பாக்யராஜ்

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (11:07 IST)
சர்கார் விவகாரத்தால் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகிய கே.பாக்யராஜ் மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
சர்க்கார் பட விவகாரத்தில் ஞாயத்தின் பக்கம் நின்று கதை திருட்டு விவகாரத்தை வெளியே கொண்டு வந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் சர்கார் கதை விவகாரத்தை வெளியே கொண்டுவந்ததால் தான் தனிப்பட்ட முறையில் பல அசௌகர்யங்களுக்கு ஆளானதால் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் சங்க நிர்வாகிகள் அவரின் ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர். ஆனால் தனது முடிவிலிருந்து மாறாத பாக்யராஜ் மீண்டும் 2வது முறையாக தனது ராஜினாமா கடிதத்தை சங்கத்திற்கு அனுப்பினார்.
 
பாக்யராஜ் தலைவர் பதவியில் இருந்து விலகியதன் விளைவாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் 21 பேர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். இதனால் பாக்யராஜ் மீண்டும் தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
 
இதனையடுத்து பாக்யராஜ் தனது முடிவை மாற்றி மீண்டும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை நேற்று அவர் ஒரு நிகழ்ச்சியில் உறுதி செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments