Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘நாகேஷ் திரையரங்கம்’ மீதான தடை நீங்கியது

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (16:43 IST)
‘நாகேஷ் திரையரங்கம்’ மீதான தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 



 

ஆரி, ஆஷ்னா ஜவேரி நடிப்பில், ஐசக் இயக்கியுள்ள படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. இந்த தலைப்பைப் பயன்படுத்தக் கூடாது என நடிகர் நாகேஷின் மகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘என்னுடைய தந்தை பிரபல நடிகர் நாகேஷ். அவர் தி.நகரில் நாகேஷ் தியேட்டரை நடத்தி வந்தார். அதேபெயரில் இப்போது ஒரு படத்தை எடுத்துள்ளனர். இதற்காக எங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. எனவே, படத்தைத் தடைசெய்வதோடு, 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும்’ என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், “மனுதாரரின் தந்தை ‘நாகேஷ் தியேட்டர்’ என்று நடத்தியிருக்கிறார். ஆனால், படத்துக்கு ‘நாகேஷ் திரையரங்கம்’ என்று பெயர் வைத்துள்ளனர். இது எந்த வகையிலும் மனுதாரரைப் பாதிக்காது என்பதால், தடையை நீக்கி பெயரைப் பயன்படுத்த உத்தரவிடுகிறோம்” எனத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

டிராகன் படம் ரிலீஸாவதற்கு முன்பே சிம்பு கொடுத்த விமர்சனம்!

ரசிகர்களை படத்துக்கு வரவழைக்க முதல் படத்தின் விளம்பரத்திலேயே வித்தியாசம் காட்டிய பார்த்திபன்…!

விஜய்யுடன் ரகசிய அரசியல் வியூகம்.. நடிகர் பார்த்திபன் பதிவால் பரபரப்பு..!

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments