Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷால், விஜய் சேதுபதிக்கு சம்பள பாக்கி இல்ல: 96 பட தயாரிப்பாளர் மறுப்பு!

விஷால், விஜய் சேதுபதிக்கு சம்பள பாக்கி இல்ல: 96 பட தயாரிப்பாளர் மறுப்பு!
, ஞாயிறு, 11 நவம்பர் 2018 (12:14 IST)
96 படத்தில் நடித்த விஜய் சேதுபதி, துப்பறிவாளன் படத்தில் நடித்த விஷால் உள்ளிட்டோருக்கு சம்பள பாக்கி வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டை, தயாரிப்பாளர் நந்தகோபால் மறுத்துள்ளார்.
 
நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை ஒன்று  வெளியிடப்பட்டுள்ளது. அதில், மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பான துப்பறிவாளன் படத்தில் நடித்ததற்காக விஷாலுக்கும், வீர சிவாஜி படத்தில் நடித்ததற்காக விக்ரம்பிரபுவுக்கும் இன்னும் சம்பள பாக்கி வழங்கப்படாமல் உள்ளது. 
 
மேலும், 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கும் சம்பள பாக்கி வழங்காமலேயே படம் வெளியானது. மேற்கண்டப் படங்களை வெளியிடும் கடைசி நேரத்தில், நடிகர்களின் சூழ்நிலையை இந்தத் தயாரிப்பு நிறுவனம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தொடர்ந்து சம்பளம் வழங்காமல் படங்களை வெளியிட்டு வருகிறது. பட வெளியீட்டின்போது இக்கட்டான சூழ்நிலையில் என்றுமே நடிகர்கள் தங்களின் சம்பளத்தை விட்டுக் கொடுத்தே தயாரிப்பாளர்களுக்கு உதவி வருகின்றனர்.
 
ஆனால், அந்த நல்ல செயலைப் பலவீனமாக எடுத்துக் கொண்டு, சில தயாரிப்பாளர்கள் நடிகர்களை நிர்பந்தப்படுத்துவது அல்லது பரஸ்பரம் ஒப்புக்கொண்ட சம்பளத்தைத் தரமறுப்பது என்பதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
 
கடந்த காலங்களில் இருந்தே பல நடிகர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இதை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், நடிகர் சங்கத்தின் நிர்வாகக்குழு கலந்து ஆலோசித்தது.
 
அதன் அடிப்படையில், இனிவரும் காலங்களில் இதுபோன்று செயல்படும் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கும்/தயாரிப்பாளருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்ந்த உறுப்பினர்கள், எந்த ஒரு நிகழ்வுக்கும் படங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
 
அதன்படி, தற்போது மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எந்த ஒரு நிகழ்வுக்கும் படங்களுக்கும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் எந்த ஒத்துழைப்பும் நல்க வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் தயாரிப்பாளர் நந்தகோபால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதாவது, துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு சொன்ன சம்பளத்தைக் கொடுத்துவிட்டேன். அதேபோல 96 திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு தருகிறேன் என்று சொன்ன சம்பளப் பணத்தை வழங்கிவிட்டேன். இவர்களிடம் நான் எப்போதுமே தவறாக நடந்துகொள்ளவே இல்லை.
 
மேலும் வீர்சிவாஜி படத்தில் விக்ரம் பிரபுவுக்கும் சின்னச் சின்ன கருத்துவேறுபாடுகள் வந்தன. அதனால் சில உடன்படிக்கைகள் நடைபெறாமலே போய்விட்டன. மற்றபடி, விஷாலுக்கும் விஜய் சேதுபதிக்கும் சம்பள பாக்கி வைத்திருக்கிறேன் என்று சொல்வது தவறானது என நந்தகோபால் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே படத்தில் ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்!