Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“மீண்டும் இயக்குனர் ஆகும் எண்ணம் இல்லை…” நடிகர் மாதவன் தகவல்

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2022 (15:40 IST)
நடிகர் மாதவன் சமீபத்தில் இயக்கி நடித்து வெளியிட்ட ராக்கெட்ரி திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.

மாதவன் நடித்த ராக்கெட்டரி  என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றாலும் அந்த படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வசூல் செய்யவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் நெட்டிசன்கள் சிலர் மாதவனுக்கு ராக்கெட்டரி படத்தால் நஷ்டம் என்றும், அவர் தன்னுடைய சொந்த வீட்டை விற்று விட்டார் என்று செய்திகளை பரப்பினர். ஆனால் அதில் உண்மையில்லை என்று அவரே வெளியிட்டார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் அவர் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு “இப்போது நான் நடிப்பில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறேன். எதிர்காலத்தில் இயக்குனர் ஆவதற்கான வாய்ப்பும் இல்லை. நான் இயக்குனர் ஆனது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு” எனக் கூறியுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

கேம் சேஞ்சர் படத்தைப் பற்றி பேச எனக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது… அஞ்சலி பதில்!

சலார் 2 படம் ட்ராப்பா?... புகைப்படம் மூலம் பதிலளித்த படக்குழு !

கேரளாவில் ரி ரிலீஸ் ஆகும் சூர்யா முருகதாஸின் சூப்பர்ஹிட் திரைப்படம்!

சென்சார் போர்ட் எதிர்ப்பால் தலைப்பு மாறும் ‘வடக்கன்’ படம்!

தனுஷின் ராயன் ஒதுங்கியதால் வருகிறதா விஜய் சேதுபதியின் 50 ஆவது படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments