Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேன்ஸ் விழாவில் மாதவன் இயக்கிய’ ராக்கெட்ரி’… வெளியான தகவல்!

Webdunia
வியாழன், 5 மே 2022 (08:56 IST)
நடிகர் மாதவன் இயக்கியுள்ள ராக்கெட்ரி திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸூக்காக காத்திருக்கிறது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.  இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் வந்தார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலிஸுக்கு தயாராக உள்ளது. ரிலிஸூக்கு சரியான நேரம் பார்த்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக காத்திருந்தார் மாதவன். சில முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் பின்னர் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படம் இப்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் வரும் மே 19 ஆம் தேதி சிறப்புத் திரையிடலாக திரையிடப்பட உள்ளது. இதுபற்றி பேசியுள்ள இயக்குனர், நடிகர் மாதவன் “நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன்! நான் நம்பி நாராயணனின் கதையை மட்டுமே  சொல்ல விரும்பினேன், ஆனால் தற்போது நடப்பதையெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை. கடவுளின் கிருபையுடன், நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம், படத்திற்கு நடக்கும் அனைத்து நல்ல விஷயங்களையும் பார்க்க நான் நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன். ஒரு அறிமுக இயக்குநராக, என் அதிக பதட்டத்தை தருகிறது.  இப்படம் இந்தியாவை பெருமைப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்!" என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

பிரசாந்த் நீல் & ஜூனியர் என் டி ஆர் இணையும் படம் ட்ராப்பா?... இணையத்தில் பரவும் தகவல்!

கைவிட்ட நெட்பிளிக்ஸ்… வேறு ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா தங்கலான்?

ஷூட்டிங் ஸ்பாட்டில் அறிமுக இயக்குனரை அவமானப்படுத்திய கவின்?

ஜூனியர் என் டி ஆரை இயக்கும் நெல்சன்… நண்பனுக்கு வாய்ப்பு வாங்கித் தந்த அனிருத்!

அடுத்த கட்டுரையில்
Show comments