Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கீரவாணியின் இசைக்கு வயது 20 நம் தமிழுக்கு வயது 18” ஜெண்டில்மேன் 2 அப்டேட் கொடுத்த வைரமுத்து!

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (14:56 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்து 1993ல் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இது ஷங்கரின் முதல் படமாகும். மதுபாலா, சுபஸ்ரீ, செந்தில், கவுண்டமனி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இந்த படம் அப்போதைய காலத்திலேயே பெரும் வெற்றி பெற்றது. புதுமுக இயக்குனர் ஷங்கரை நம்பி அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்தார் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன்.

நீண்டகாலமாக படத்தயாரிப்புகளில் ஈடுபடாத அவர் , தற்போது ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக கே.டி.குஞ்சுமோன் அறிவித்தார். இதற்காக தற்போது “ஜெண்டில்மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன்  மூலமாக தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்துக்கு பாடல்கள் எழுதி வரும் வைரமுத்து X தளத்தில் படம் பற்றி “ஐதராபாத்தில் இருக்கிறேன் ஜென்டில்மேன் 2 படத்திற்கான பாடல் புனைவு நடந்து கொண்டிருக்கிறது கே.டி.குஞ்சுமோனுக்கு வாக்களித்தபடி இந்த வாரம் மொத்தப் பாடல்களையும் முடித்துக்கொடுப்போம் கீரவாணியின் இசைக்கு வயது 20 நம் தமிழுக்கு வயது 18. காத்திருங்கள் ஒரு கலக்குக் கலக்கும் பாருங்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

அடுத்த கட்டுரையில்
Show comments