Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்டையன் ரிலீஸ் மூலம் விடாமுயற்சி ரிலீஸை உறுதி செய்ததா லைகா புரொடக்‌ஷன்ஸ்?

விடாமுயற்சி
vinoth
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (14:03 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முடிந்தது.

இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதோடு மொத்த ஷூட்டிங்கும் முடியவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் அஸர்பைஜானுக்கு ஒருவாரம் ஷூட்டிங் செல்ல வேண்டும் என இயக்குனர் மகிழ் திருமேனி கூறியுள்ளாராம். ஆனால் எப்படியும் விடாமுயற்சி படத்தைத் தீபாவளிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக உள்ளது.

இந்நிலையில் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படமான ‘வேட்டையன்’ ரிலீஸ் தேதி அக்டோபர் 10 ஆம் தேதி என்பதை உறுதி செய்துள்ளனர். இதன் மூலம் விடாமுயற்சி திரைப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு ரிலீஸாவது உறுதி என்பது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் கேட்ட சம்பளம்.. அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்?

இந்தியாவுக்கு வருகிறது AI ஸ்டுடியோ.. விஜய் பட தயாரிப்பாளரின் முதல் முயற்சி..!

அந்த கராத்தே பாபுவே நான் தான்.. இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு..!

முதன்முறையாக சுந்தர் சி உடன் இணையும் கார்த்தி.. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமன்னா..!

ஹோம்லி லுக்கில் ஸ்டன்னிங் ஆல்பத்தை வெளியிட்ட ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments