Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்-விஜய்சேதுபதி படப்பிடிப்பு எப்போது? லோகேஷ் வெளியிட்ட தகவல்!

Webdunia
ஞாயிறு, 5 ஜனவரி 2020 (10:04 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் தளபதி விஜய்யின் 64வது திரைப்படமான ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஒரு முக்கிய ஸ்டூடியோவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது விஜய் சேதுபதிக்கு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஜீ சினிமா திரைப்பட விருது வழங்கும் விழாவில் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு ’கைதி’ திரைப்படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனர் விருது அளிக்கப்பட்டது. இந்த விருதை கமலஹாசன் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட லோகேஷ் கனகராஜ் பின்னர் பேசியதாவது:
 
விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் இன்னும் 10 நாட்களில் படமாக்கப்பட உள்ளது. அந்த படப்பிடிப்பை நடத்த நான் மட்டுமின்றி படக்குழுவினர் அனைவருமே மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்’ என்று தெரிவித்தார். மேலும் ‘தற்போது விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு மேல் இந்த படம் குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். லோகேஷ் கனகராஜ் தெரிவித்த இந்த தகவல் தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

கடல் மட்டத்தில் இருந்து 33000 அடி உயரத்தில் ஆக்‌ஷன் காட்சி… பிரம்மாண்டத்துக்கு தயாராகும் சல்மான் கான்& முருகதாஸ்!

அமெரிக்காவில் முன்பதிவிலேயே இத்தனை கோடி வசூலா?... சாதனை படைத்த பிரபாஸின் கல்கி!

விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

மகாராஜா படக்குழுவினரைப் பாராட்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

கோட் படத்தோடு சினிமா கேரியருக்கு முற்றுப் புள்ளி வைக்கிறாரா விஜய்?.. தீயாய் பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments