Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னுடைய அடுத்த தயாரிப்பு வேலையை தொடங்கிய லோகேஷ்… ஹீரோவாகும் யுடியூப் ஸ்டார்!

vinoth
சனி, 1 ஜூன் 2024 (06:30 IST)
லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தற்போது இருந்து வருகிறார். அது மட்டுமில்லமல் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் மூலமாக ஃஃபைட் கிளப் என்ற திரைப்படத்தை வெளியிட்டார். எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான அந்த திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.

இதையடுத்து இப்போது அடுத்த படத் தயாரிப்பு வேலைகளில் இறங்கியுள்ளார். யுடியூபில் ஃபைனலி என்ற சேனல் மூலம் கவனம் பெற்ற பாரத் இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் சிவகார்த்திகேயனோடு பிரின்ஸ் மற்றும் பிரதீப்போடு லவ் டுடே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்தை ஃபைனலி சேனலின் பட வீடியோக்களை இயக்கிய நிரஞ்சன் இயக்குகிறார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க லோகேஷ் வழங்குகிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படவுள்ள இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. அதில் லோகேஷும் நடித்துள்ளார். விரைவில் படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் அறிவிகக்ப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பிரதர்' படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி!

அங்கம்மாள் படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) அதிகாரப்பூர்வமாக தேர்வு!

100 நாட்கள் திரைப்படங்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடும் நிலை மாறி 4 நாட்களிலேயே போட்ட காசை எடுக்கும் நிலை வந்துள்ளது- அசத்தலாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி!

ஜீவா-பிரியா பவானி சங்கரின் ‘பிளாக்’ திரைப்படம் அக்-11ல் வெளியாகிறது!

ரஜினியின் உடல் பூரண நலமுடைய வேண்டி அபூர்வ ராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் 171 உருவங்களை மரப்பலகை மற்றும் களிமண்னால் வடிவமைத்து கொலு அமைத்த தீவிர ரஜினி ரசிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments