Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல முறை யோசித்த பின்னரே அந்த காட்சியை நீக்கினோம்… லோகேஷ் கனகராஜ் பதில்!

பல முறை யோசித்த பின்னரே அந்த காட்சியை நீக்கினோம்… லோகேஷ் கனகராஜ் பதில்!
, செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (17:26 IST)
மாஸ்டர் படத்தின் டெலிடட் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் அதே நேரத்தில் இந்த படம் வெளியான 16 நாட்களில் ஓடிடியில் வெளியாகியுள்ளது நேற்று நள்ளிரவு முதல் இந்த படம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி உள்ள நிலையில் இனிமேல் .தியேட்டருக்கு இந்த படத்தை பார்க்க பார்வையாளர்கள் வருவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் மீது கோபமாக இருப்பதாகவும், அவரின் வருங்கால படங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் நீளம் கருதி வெட்டப்பட்ட காட்சிகளை இப்போது இணையத்தில் வெளியிட்டனர். ஆனால் எதிர்பார்ப்பை விட அந்த காட்சிக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அதை நீக்கி இருக்க வேண்டாமே என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கு இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். அதில் ‘ படத்தின் நீளம் மற்றும் ஓட்டம் கருதிதான் அந்த காட்சியை நீக்கினோம்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ப்ரஸ் மீட்டில் அட்ராசிட்டி செய்த சந்தானம் பட இயக்குனர்!