Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் அண்ணாவும், சேது அண்ணாவும் வர காட்சிகள் ஃபைரா இருக்கும் - வைரல் வீடியோ!

Webdunia
சனி, 29 பிப்ரவரி 2020 (11:35 IST)
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் ஒரு சில பேட்ச் வொர்க் படப்பிடிப்பு மட்டுமே தற்போது நடைபெற்று வருவதாகவும் அதுவும் இந்த வாரத்திற்குள் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது
 
எனவே அடுத்த வாரம் முதல் மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் நாம் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. விஜய் கூறும் குட்டி கதை கேட்க கோடான கோடி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 
 
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது மாஸ்டர் குறித்து பேசிய அவர் "  விஜய் அண்ணாவும் சேது அண்ணாவும் ஒன்றாக திரையில் வரும் காட்சிகள் அனைத்தும் ஃபைரா இருக்கும்" என கூறி அரங்கத்தை கைத்தட்டல்களால் அதிர வைத்தார். வெறித்தனமான அந்த காட்சிகளை பார்க்க இன்னும் ஆர்வம் தூண்டுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!

சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகி நோட்டீஸ்..!

அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி! முகத்துக்கு நேராக சொன்ன பார்த்திபன்! - சுஹாசினி கொடுத்த ’நச்’ பதில்!

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments