Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலை வைத்து பிரம்மாண்ட போட்டோஷூட் – லோகேஷின் வித்தியாசமான முயற்சி!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (10:57 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கும் அடுத்த படத்தின் போட்டோஷுட் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகவும் இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர் நேசன்ல் தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தின் ஷீட்டிங் முடியாததாலும் லோகேஷ் படம் தொடங்குவது தாமதமாகும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் திடீரென அந்த படத்தில் கமலே நடித்து தயாரிக்க உள்ளார்.

அந்த படத்துக்கு எவன் என்று நினைத்தாய் அல்லது குரு எனப் பெயர் வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டோஷூட் சில வாரங்களுக்கு முன்னால் சென்னையில் நடந்தது. இதையடுத்து நவம்பர் 7 ஆம் தேதி அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு ஆகியவை வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் லோகேஷ் நடத்தியுள்ள போட்டோஷூட் குறித்து திரையுலகமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளது. ஏனென்றால் வழக்கமான போட்டோஷூட் போல இல்லாமல் இதற்காக ஸ்டண்ட் கலைஞர்களை எல்லாம் வரவழைத்து போட்டோகிராபர் வெங்கட்ராமை வைத்து மிக பிரம்மாண்டமாக நடத்தியுள்ளாராம் லோகேஷ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 படத்தை உறுதி செய்த ரஜினியின் மக்கள் தொடர்பாளர்!

அட்லி இயக்கும் அடுத்த படம் வரலாற்றுக் கதையா?... வெளியான தகவல்!

இந்தியாவே எதிர்பார்க்கும் கல்கி 2898 கிபி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது

"எமகாதகன்" ஜூலை 5 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது...

தமிழர்களுக்கான எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி: விஜய்க்கு வாழ்த்து கூறிய தயாரிப்பாளர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments