Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு தினத்தில் உச்சம் தொட்ட மதுபான விற்பனை!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (15:37 IST)
புத்தாண்டு தினத்தைமுன்னிட்டு நேற்று  முன்தினம்( 30-12-20)  தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரேநாளில் மட்டும் இந்தக் கொரொனா காலத்திலும்கூட ரூ.159 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் புத்தாண்டுக் கொண்டாட்ட இரண்டு நாட்களில் மட்டும் மதுவிற்பனை ரூ.300 கோடியை எட்டியுள்ளது.

தமிழகத்தில் கொரொனா கால ஊரடங்கு வரும் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை ஏற்கனவே உள்ள சில தளர்வுகளுடம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தத் தளர்வுகளும் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு மதுபானக் கடைகளைத் திறக்க உத்தர விட்டது.

எனவே நேற்று  முன் தினம்(டிசம்பர் -310 மற்றும் நேற்று புத்தாண்டு தினத்தைமுன்னிட்டு நேற்று தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் அமோகமாக விற்பனையாகியுள்ளது.

குறிப்பாக நேற்று ஒரேநாளில் மட்டும் இந்தக் கொரொனா காலத்திலும்கூட ரூ.159 கோடிக்கு மது விற்பனையானது.

அதன் விவரங்கள்: சென்னை மண்டலத்தில் ரு.48 .75 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.28.40 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ. 28.10 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ,27.30 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ. 26.49 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில், நேற்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழை ( ஜனவரி 1ஆம் தேதி) தமிழகத்தில் ரூ.138 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது.

ஆனால் கடந்தாண்டு புத்தாண்டின் இரண்டு தினத்தில் விற்கப்பட்ட மதுபான விற்பனையை ஒப்பிடும்போது, இந்த வருடம் ரூ.14 குறைந்துள்ளது. இருப்பினும் இந்தக் கொரொனா கால ஊரடங்கிலும் இத்தனை விற்பனை என்பது வியப்பில் ஆழ்த்துவதாகப் பலரும் கருத்துதெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

ஒருவழியாக தொடங்குகிறதா சிம்பு – தேசிங் பெரியசாமி படம்?

75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments