Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல் ஐ சி படம் கிடப்பில் போடப்பட நெட்பிளிக்ஸ் நிறுவனம்தான் காரணமா?

vinoth
வியாழன், 11 ஜூலை 2024 (11:50 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே புகழ் ப்ரதீப் ரங்கநாதன் எல் ஐ சி என்ற படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவை ஈஷா மையத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த ஷூட்டிங்கை ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கினார் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

முதலில் ப்ரதீப் சம்மந்தமான காட்சிகளை படமாக்கிய விக்னேஷ் சிவன் அதன் பின்னர் எஸ் ஜே சூர்யா நடித்த காட்சிகளைப் படமாக்கினார். இப்போது தமிழகத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடித்துள்ள விக்னேஷ் சிவன் அடுத்து சிங்கப்பூர் சென்று சில முக்கியக் காட்சிகளை படமாக்கி வந்தார். இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த ரவி வர்மன் தற்போது இந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குக் காரணம் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது.

மேலும் படமே இப்போதைக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் சமீபகாலமாக ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் பெருமளவில் குறைந்துள்ள நிலையில் படத்தின் பட்ஜெட்டை வைத்து போட்ட பணத்தை எடுக்க முடியாது என்பதுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தைக் கிடப்பில் போட்டதற்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒரு முக்கியக் காரணம் என சொல்லப்படுகிறது. படத்தின் சேட்டிலைட் உரிமையைக் கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு பிஸ்னஸ் கட் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதை பார்த்த அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் அடுத்த கட்ட தவணைப் படத்தையும் கொடுக்கவில்லையாம். அதனால்தான் இப்போதைக்கு எல்  ஐ சி படம் பரண்மேல் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அறிவாளியாக இருந்தால் வெளியே போய்விடுங்கள்… உபேந்திரா படத்தின் ஸ்லைடால் கடுப்பான ரசிகர்கள்!

யாரும் பயப்படவேண்டாம்… நான் நலமுடன் திரும்பி வருவேன் –சிவராஜ்குமார் நம்பிக்கை!

கங்குவா படத்தைக் கட்டம் கட்டி விமர்சித்தது தவறு.. பாக்யராஜ் வேதனை!

திரும்பும் பக்கமெல்லாம் பாசிட்டிவ் ரிவ்யூ.. தேசிய விருது உறுதி!? - விடுதலை-2 க்கு கிடைக்கும் மாஸ் வரவேற்பு!

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் லிஸ்ட்டில் இருக்கும் மூன்று இயக்குனர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments