Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை 2 முதல் லுக் போஸ்டர் எப்போது?... வெளியான தகவல்!

vinoth
வியாழன், 11 ஜூலை 2024 (11:40 IST)
கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில்  தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது.

முதல் பாகத்தில் இல்லாத மஞ்சு வாரியர், கென் கருணாஸ் எல்லாம் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர். இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடிட் செய்யப்பட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்துவிட்டனவாம். கடைசி கட்டமாக 10 நாட்கள் ஷூட்டிங் பூந்தமல்லியில் நடக்க உள்ளதாம். அந்த காட்சிகளைப் படமாக்கிவிட்டால் மொத்த படமும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகளை தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி அடுத்த வாரத்தில் விடுதலை 2 படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. மகாராஜா படம் தந்த வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் விஜய் சேதுபதிக்கு இது கூடுதல் சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments