Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''லியோ'' படம் வெற்றி- விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி டுவீட்

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (18:33 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் பற்றி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  மாஸ்டர் படத்திற்குப் பின்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ.

இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளளது.

சமீபத்தில், லியோ படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகமூட்டிய நிலையில்,  நேற்று லோகேஷ் கனகராஜ் லியோ பட புதிய போஸ்டரை ரிலீஸ் செய்தார்.

Keep calm and prepare for battle  என்ற கேப்சனுடன் இந்த போஸ்டர் வெளியானது. இதில், விஜய் ஆக்ரோசமாக இருந்தார். இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், இன்று மாலை 6 மணிக்கு லியோ படத்தின் இந்தி போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்தபடி, புதிய போஸ்டர் ரிலீஸ் செய்துள்ளனர்.

இதில்.  நடிகர் விஜய், கே.ஜிஎ.ஃப் படத்தில் நடித்து மிரட்டிய பாலிவுட் நடிகர் சஞ்சத் தத்தின் கழுத்தை   பிடித்து  நெறிப்பது போன்ற இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது.

லியோ படத்தின்  இந்தி போஸ்டர் வெளியாகி வைரலாகி வரும்  நிலையில், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தன் எக்ஸ் தளத்தில், வெற்றி என்று பதிவிட்டு, லியோ பட இந்தி போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments