Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபலமாக வேண்டுமென்றால், உங்கள் மீது ஏன் குற்றம் சாட்டவேண்டும் –லீனா மணிமேகலை பாய்ச்சல்.

Susi ganeshan
Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (11:41 IST)
தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் பொய் என்றும் பிரபலமாவதற்காக லீனா மணிமேகலை பொய் சொல்கிறார் என்றும் கூறிய இயக்குனர் சுசி கணேசனுக்கு லீனா மணிமேகலை பதிலடி கொடுத்துள்ளார்.

மீ டூ விவகாரம் தற்போது நாடெங்கும் பற்றி எரிகிறது. பாலிவுட்டில் நானா பாடேகர் உள்ளிட்ட சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிக்கியுள்ளனர். அதேபோல், கோலிவுட்டில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல்  புகாரை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து பல்வேறு துறையை சேர்ந்த பல பெண்களும், தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கவிஞரும், ஆவணப்பட இயக்குனருமான லீனா மணிமேகலை, திருட்டுப்பயலே, கந்தசாமி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் புகாரை கூறியுள்ளார்.  இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டே தான் அனுபவித்த பாலியல் தொல்லையைப் பெயர் குறிப்பிடாமல் அவர் பதிவு செய்துள்ளார். அதை தற்போது டிவிட்டர் பக்கத்தில் சுசிகணேசனின் பெயரைக் குறிப்பிட்டு மீ டூ ஹேஷ்டேக்குடன் பதிவு செய்தார். இது சம்மந்தமாக நேற்று பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து நடந்த சம்பவம் குறித்த விளக்கம் அளித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த சுசி கணேசன் லீனா கூறுவது பொய் என்றும் அவர் பிரபலமாவதற்காக என் மீது பழிபோடுகிறார் என்றும் அவர் மீது மானநஷ்ட வழக்குப் போடப்போவதாகவும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறினார். அதற்குத் தனது முகநூல் பக்கத்தில் லீனா மணிமேகலை தற்போது பதிலளித்துள்ளார். அதில் ‘சுசி கணேசன் சொல்வது போல பொய்யாக குற்றச்சாட்டு சொல்லி இன்னும் பிரபலமாக வேண்டும் என்பது தான் என் நோக்கம் எனறால், ஹேண்ட்சம்மாக, எனக்கு heavy crush இருக்கிற, நான் விரும்பும் சினிமா எடுக்கும், நன்கு அறியப்பட்ட, சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஒருவரை தேர்ந்தெடுத்து சொல்லியிருப்பேன். நிச்சயமாக இதில் எந்த லட்சணமும் சுசி கணேசனுக்கு இல்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்