Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தவர்களுக்கும் நன்றி… வராதவர்களுக்கும் நன்றி… ஒத்த ஓட்டு முத்தையா பட நிகழ்ச்சியில் கவுண்டமணி கலகல பேச்சு!

vinoth
புதன், 5 பிப்ரவரி 2025 (07:21 IST)
கவுண்டமணி கடைசியாக நடித்தது எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை திரைப்படம். அதன்பிறகு 6 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தள்ளார். இந்த படத்தை கவுண்டமணி காமெடிகளுக்கு ட்ராக் எழுதிய சாய் ராஜகோபால் இயக்குகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படம் சம்மந்தமான கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் விழா நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய கவுண்டமணி “என்ன பேசுவது என்று தெரியவில்லை. வந்திருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. வராத ரசிகர்களுக்கும் நன்றி. வெளியூரில் இருக்கும் ரசிகர்கள், ஹாலிவுட்டில் இருக்கும் நடிகர்கள், வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. ஒத்த ஓட்டு முத்தையா குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். அதனால் எல்லோரும் இந்த படத்தைப் பார்த்து ஒத்த ஓட்டு முத்தையாவை – வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நான் திரும்ப திரும்ப சொல்கிறேன் இந்த படத்தை எல்லோரும் பார்க்கவேண்டும். அதை வெற்றிப்படமாக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலக புற்றுநோய் தினத்தில் நடிகை கெளதமி ஏற்படுத்திய விழிப்புணர்வு..!

டிரடிஷனல் லுக்கில் கொள்ளையழகில் ஜொலிக்கும் ஸ்ரேயா…!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய் பட வில்லனை சிறைப்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்… விமான நிலையத்தில் நடந்த அவமதிப்பு!

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தி விலகியது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments