Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் படத்தில் கீர்த்தி சுரேஷா?... குட் பேட் அக்லி லேட்டஸ்ட் அப்டேட்!

vinoth
சனி, 1 ஜூன் 2024 (10:19 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் லைகா நிறுவனத்தின் பொருளாதார காரணங்களால் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே தொடங்கி தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் நயன்தாரா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது கீர்த்தி சுரேஷ்தான் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகிய உடையில் கேட்வாக் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

வித்தியாசமான காஸ்ட்யூமில் க்யூட்டான போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அடுத்தடுத்து மாஸ் படங்களில் கமிட்டாகும் சாய் அப்யங்கர்… சிம்பு படத்துக்கும் அவர்தானாம்!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கைக் குறைவு.. பேட் கேர்ள் சர்ச்சை குறித்து மிஷ்கின் பேச்சு!

என்னுடைய காதலர் இவர்தான்.. காதலர் தினத்தில் அறிவித்த பிக்பாஸ் ஜாக்குலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments