Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

பாகுபலி இயக்குனர் படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

Advertiesment
SS Rajamouli
, சனி, 17 நவம்பர் 2018 (12:25 IST)
நடிகையர் திலகம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
 
இயக்குனர் ராஜமவுலியின் படத்தில் தலைகாட்ட ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று கதாநாயகிகள் தவம் கிடக்கும் நிலையில் அவர் படத்தில் கதாநாயகியாகவே நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேசுக்கு கிடைத்து இருக்கிறது.
 
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படத்தில் கீர்த்தி சுரேசின் நடிப்பை முதலில் பாராட்டியவர் இயக்குனர் ராஜமவுலி தான். அப்போதே ராஜமவுலி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என தகவல் வந்தது. அது தற்போது உறுதியாகி இருக்கிறது. 
 
ராஜமவுலி தற்போது  தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இரண்டு பிரபலங்களை  வைத்து ஆர்ஆர்ஆர் படத்தை இயங்குவதாக கூறி ஹீரோக்களோடு தான் இருக்கும் புகைப்படத்தில் ஆர்ஆர்ஆர் என்ற தலைப்பிட்டு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
 
கடந்த 11ம் தேதி தொடங்கிய இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளாம்.அதில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாராம்.
 
மகாநதி படத்தில் அற்புதமான நடிப்பை கொடுத்ததற்காகவே இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் பேசிக்கொள்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடேங்கப்பா! பிரியங்கா திருமணத்துக்கான அரண்மனை வாடகை இவ்வளவா?