Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் யாரையும் லவ் பண்ணல: உண்மையை போட்டுடைத்த கவின்

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (07:59 IST)
பிக்பாஸ் வீட்டின் பிளேபாயாக வலம் வந்து கொண்டிருக்கும் கவின் வீட்டில் உள்ள நான்கு பெண்களை மச்சான் மச்சான்' என்று கூப்பிட்டு ஜாலியாக சுற்றி வருகிறார். அதிலும் சாக்சியுடன் அவர் கிட்டத்தட்ட காதலை புரபோஸ் செய்துவிட்டதாகவே கருதப்படுகிறது
 
இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவர் கவினுக்கு போன் செய்து 'நீங்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை யாரை உண்மையாக காதலிக்கின்றீர்கள்' என்று கேள்வி எழுப்ப முதலில் தர்மசங்கடமான கவின் பின்னர் உண்மையை போட்டுடைத்தார். தான் இந்த வீட்டில் உள்ள யாரையும் இதுவரை காதலிக்கவில்லை என்றும், எனக்கு ஏழு அத்தை பெண்கள் உள்ளனர் அவர்களிடம் ஜாலியாக பழகுவதை போன்றே இங்குள்ள பெண்களிடமும் ஜாலியாக பழகுவதாகவும் இதுவரை தனக்கு காதல் வரவில்லை என்றும் கூறினார்
 
கவினின் பதிலை கேட்டு சாக்சி மட்டும் அதிர்ச்சி அடைந்தார். பார்வையாளர்கள் உள்பட மற்ற போட்டியாளர்கள் கிட்டத்தட்ட இந்த பதிலை எதிர்பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பாத்திமாபாபு வெளியேற்றப்பட்டார். வெளியேறும் முன் அவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு சக்தியின் மூலம் பிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவராக தர்ஷன், அபிராமி மற்றும் சாண்டி ஆகிய மூவரில் ஒருவர் வரலாம் என்று கூறிவிட்டு விடைபெற்றார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments