விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்
இந்த படத்திற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் மாறிமாறி வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் இது வசூலில் வெற்றி படமாக இருக்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கணித்துள்ளனர்
இதனிடையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும் டிஜிட்டல் உரிமையை ஹாட்ஸ்டாரும் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இதுவரை வெளியான விஜய் சேதுபதி படங்களில் இந்த படத்திற்கு தான் அதிக தொகை சாட்டிலைட் உரிமைக்காக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது