Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய் பீம் தவறவிடக் கூடாத படம்… கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (13:45 IST)
சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ஜெய் பீம் திரைப்படம் அமேசான் ப்ரைமில் நேற்று வெளியானது.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கான நீதியை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் நேற்றிரவு வெளியானது. வெளியாவதற்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பு இருந்த இந்த திரைப்படம் இப்போது பல தரப்பினரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. சூர்யாவின் சூரரைப் போற்று ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இப்போது ஜெய் பீம் திரைப்படமும் வெற்றியை உறுதி செய்துள்ளது.

திரைப்பட ரசிகர்கள் மட்டுமில்லாது திரையுலகினரையும் படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது. திரைத்துறையினர் பலரும் படத்தை பாராட்டிவரும் நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘தைரியமாகவும் உண்மையாகவும் எடுக்கப்பட்ட திரைப்படம் ஜெய் பீம்.  ஒடுக்கப்பட்டவர்களின் வலியை எடுத்துரைத்து நீதி துறையின் மீது நம்பிக்கை விதைக்கிறது. தயவு செய்து தவற விட்டுவிடாதீர்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments