Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே படத்தில் கார்த்திக் – கெளதம் கார்த்திக்

Advertiesment
ஒரே படத்தில் கார்த்திக் – கெளதம் கார்த்திக்
, ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (15:32 IST)
அப்பா – மகனான கார்த்திக் – கெளதம் கார்த்திக் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர்.


 
 
என்னதான் ஒரே வீட்டில் இரண்டு நடிகர்கள் இருந்தாலும், இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். அதுவும், கணவன் – மனைவி, அப்பா – மகன்/மகள் உறவாக இருந்துவிட்டால், ஒன்றாக நடிக்க மாட்டார்கள். 
 
அப்படியே நடித்தாலும், நிஜ உறவைப் போன்ற கேரக்டரில் நிச்சயம் நடிக்க மாட்டார்கள். ஆனால், அரிதாக எப்போதாவது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்.
 
அப்படித்தான் கார்த்திக் – கெளதம் கார்த்திக் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர். அதுவும் அப்பா – மகனாக… திரு இயக்கும் இந்தப் படத்தை, தனஞ்செயன் தயாரிக்கிறார். கார்த்திக் அரசு அதிகாரியாகவு, கெளதம் கார்த்திக் பாக்ஸராகவும் நடிக்கின்றனர். 
 
மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஃப்ரண்ட்லி அப்பா – மகன் கதையாக இது இருக்கும் என்கிறார்கள். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. நவம்பர் முதல் வாரத்தில் ஷூட்டிங்கைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் பிரபுக்கும், துல்கர் சல்மானுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியுமா?