Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

Siva

, புதன், 15 மே 2024 (19:38 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் 'சூர்யா 44 படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னால் வெளியான நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பை கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

சூர்யா தற்போது கங்குவா என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் தீவுகளில் ஜூன் மாதம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு பணியில் கார்த்திக் சுப்பராஜ் கடந்த சில நாட்களாக இருந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து முதன்முதலாக சூர்யா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் ஆகிய மூன்று பேரின் கூட்டணி இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக இருக்கும் என்றும் இந்த படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!