Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் மோதும் கார்த்தி & சிவகார்த்திகேயனின் படங்கள்!

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (08:31 IST)
இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாக உள்ளன.

தமிழ் சினிமாவில் இரும்புத்திரை, ஹீரோ போன்ற கவனிக்கத்தக்க படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். தற்போது இவர் இயக்கத்தில் கார்த்தி நடித்து சர்தார் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. நாளை கார்த்தி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் சர்ப்ரைஸ் அறிவிப்பாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

தீபாவளி அக்டோபர் 24 ஆம் தேதி திங்கள் கிழமை வரும் நிலையில் 3 நாட்கள் முன்னதாகவே அக்டோபர் 21 ஆம் தேதி சர்தார் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படமும் அதே நாளில்தான் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு: புதுப்பேட்டை, தெறி, விக்ரம் படங்களில் நடித்த நடிகர் உயிரிழப்பு..!

ரேஸ்ல எனக்கு என்ன வேணாலும் ஆகலாம்..! - மகிழ்திருமேனியிடம் AK சொன்ன அந்த வார்த்தை!

எனக்கு எந்த விருதும் வேணாம்.. வேற யாருக்காவது குடுங்க! - மாநில விருதை வாங்க மறுத்த கிச்சா சுதீப்!

மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் அழைத்ததை இப்படிதான் பார்க்கவேண்டும்- நடிகர் குரு சோமசுந்தரம் பதில்!

வெளிநாடுகளில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments