தினேஷ் கார்த்திக் நேற்றைய போட்டியில் 6 ஆவது இடத்தில் விளையாடாமல் நான்காவது இடத்தில் இறங்கி விளையாடினார்.
இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்த நிலையில் தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது. தென்ஆப்பிரிக்க அணியின் ரிலே ரோஷோ மிக அபாரமாக விளையாடி 48 பந்துகளில் 100 ரன்கள் அடித்து உள்ளார்.
இந்த நிலையில் 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தென்னாப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் நான்காவது இடத்தில் இறங்கி அதிரடியாக விளையாடினார். 21 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்த அவர் பவுல்டு ஆகி வெளியேறினார்.
போட்டிக்கு பின்பாக தன்னுடைய நான்காவது இடத்தில் இறங்கி விளையாடிய தினேஷ் கார்த்திக் பற்றி பேசிய சூர்யகுமார் யாதவ் “தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினார். அவரின் ஆட்டத்தால் என் இடத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது” என கலகலப்பாக பேசினார்.