Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்தியின் ஜப்பான் படத்தின் இசை வெளியீடு எப்போது? வெளியான தகவல்!

கார்த்தியின் ஜப்பான் படத்தின் இசை வெளியீடு எப்போது? வெளியான தகவல்!
, வியாழன், 5 அக்டோபர் 2023 (14:23 IST)
கார்த்தி நடிப்பில் அவரது 25 ஆவது படமாக உருவாகி வருகிறது ஜப்பான் திரைப்படம். இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதை முன்னிட்டு படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. படத்தின் முக்கியக் காட்சிகளுகாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமாக ஒரு கிராமத்தையே செட்டாக உருவாக்கி படப்பிடிப்பை நடத்தினர் படக்குழுவினர். இந்நிலையில் இப்போது அங்கு மொத்த ஷூட்டிங்கும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் ஜப்பான் கார்த்தியின் 25 ஆவது படம் என்பதால் இந்த படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர். வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரன்பீர் கபூர் படத்தில் வில்லனாக நடிக்க சம்மதித்த யாஷ்… ஹீரோயினாக இணையும் சாய் பல்லவி!